Friday 4 September 2009

கலி காலமடா சாமி...

கடவுள் சிலை பார்க்க முதல் வரிசை டோக்கன் கேட்பவன்
காவு கொண்டு கடவுளை நேரில் சந்திக்க வைக்க எமன் வரும் பொது
கடைசி டோக்கன் கொடு என்கிறான்
கலி காலமடா சாமி


--அக்னிக்குஞ்சு

சிறகொடிந்த பறவை

சிகொடித்தவர்கள் இன்று தாங்கி கொள்ள வருகின்றனர்
காலும் ஒடிந்த நான் நடக்க கற்றுக்கொண்டது போல்
பறப்பதொன்றும் கடினம் இல்லை
கற்றுக்கொண்டு வருகிறேன் என்றேன்
வாழ்க்கை ஒன்றும் ஒடிந்து வீழ்ந்து விடவில்லையே...

--அக்னிக்குஞ்சு


படித்ததில் பிடித்தது - பொருளாதார வீழ்ச்சி

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினால் அடி வாங்கிய ஒரு தந்தையின் புலம்பல்

என்ன
அய்யா... எப்படி இருக்கீங்க...

அய்யா: என்னத்த சொல்ல

மூத்தவன்ஸ்டாக் புரோக்கர்- இருக்கான்
ரெண்டாவது பையன் jet airways- இருக்கான்
மூனாவதா பொறந்தவன் பேங்க்- இருக்கான்
நாலாவது பையன் சாப்ட்வேர்- (IT) இருக்கான்

கடை குட்டி பீடா கடை வச்சிருக்கான்

அவன் புண்ணியத்துல தான் இப்போ வீடே ஓடிக்கிட்டு இருக்கு

இப்படி தான் இருக்கு நாட்டு நிலைமை

-- அக்னிக்குஞ்சு

தாய்க்கு பின் தாரம்



இவளல்லவோ புதுமை பெண்... இவளல்லவோ மனைவி

-அக்னிக்குஞ்சு

ஈரடி போற்றுதும்

தலைவன் என்பவன் தன்னலம் நினைப்பதில்லை
தலைவன் என்றவன் தன்னலம் மறந்ததில்லை

Monday 27 April 2009

என் கதை தொடங்கும் நேரமிது

நானும் பல நாட்கள் ஒரு சிறுகதையாவது எழுதி விட வேண்டுமென்று நினைத்து கொண்டே இருக்கிறேன். ஆனாலும் ஒரு ஹைக்கூ கவிதை கூட எழுத அமர வில்லை. என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த பொழுதினில் தான் ஒரு உத்தி தோன்றியது. தொடர்கதை எழுதினால் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது காலம் தாழ்த்தி அடுத்த பாகம் எழுதலாம். அதற்கு நிச்சயம் நேரம் இருக்கும். அதுவும் எத்துனை தூரம் சரியாக எழுத போகிறேன் என்று தெரியவில்லை. ஆயினும் கதை எழுத தொடங்கி விட்டேன்.

எனக்குள் இப்போழ்து இரு கதைகள் கருக்கொண்டிருக்கின்றன. ஒன்று இன்றைய பொழுதினில் நிலையை பற்றியும் மற்றொன்று நாளைய எதிர்பார்ப்புகள் பற்றி எழுதுவதாகவும் முடிவு எடுத்து விட்டேன். முதல் கதையினை ஒரு இப்படிக்க் மற்றொன்றை சமூக மற்றும் அறறிவியல் ஒரு கதையாகவும் எழுத போகிறேன். இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆயினும் என் கதையினை இங்கே தொடங்குகிறேன்.

இப்படிக்கு மொக்கச்சாமி